பிரபல பின்னணி பாடகர் SP பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து சிம்பு வருத்தம் !

19 August 2020, 9:02 pm
Quick Share

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள்,

Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே. ஆனால் இவர்கள் இளகிய மனம் ஒன்று இருக்கிறது எனவே அடிக்கடி நிரூபித்து வருகிறார் அந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் SPB அவர்கள் Corona பாதிப்பினால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் இன்னும் ஆபத்தின் விளிம்பில் தான் இருக்கிறார் என்று மருத்துவமனை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிம்புவும், SPB அவர்களின் மீது அன்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

“உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.

இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர, அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.

இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ்பிபி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவர் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.

லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் ‘பாடும் நிலா’ எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி,

நாளை 20ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ்பிபி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்…” இவ்வாறு சிலம்பரசன் தனது அறி்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 43

0

0