கடந்த 2019-ம் ஆண்டு லால் ஜூனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் தான் ‘டிரைவிங் லைசென்ஸ்’. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. நடிகருக்கும், அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மலையாள படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழில் சிம்புவை பிருத்விராஜ் கதாபாத்திரத்திலும், சுராஜ் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவையும் நடிக்க வைக்க முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாடு வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவின் காட்டில் அடைமழை தான் போல..
Views: - 2240
2
2