எடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு !

30 October 2020, 10:48 pm
Quick Share

3 வருடங்களுக்கு முன், தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், மக்கள் இவரை சமூக வலைதளங்களில் இவரை திட்ட ஆரம்பிக்க, உடனே இவர் Negativity ஜாஸ்தியாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் இருந்து விலகினார் சிம்பு.

அதன் பிறகு சிம்பு உடல் எடை கூடி சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கிண்டல் கேலிக்கு ஆளானார். அவரை மீண்டும் ஒல்லியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால் அது குறித்து எந்த முயற்சியும் முதலில் அவர் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று டிவிட்டரில் தனது ஒல்லி உடம்பை சூப்பராக போஸ் கொடுத்து மீண்டும் மன்மதன் சிம்பு போல் வந்துள்ளார். இது குறித்து இலக்கியா, தனது Twitter பக்கத்தில், “சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார்.

இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள்” என்று இலக்கியா தெரிவித்துள்ளார்.

Views: - 26

0

0