கேரளா வெள்ளம் ;படம் பிடித்த இயக்குனர்;தயாராகும் சிம்பு; ஷாக் அப்டேட்

Author: Sudha
11 July 2024, 12:42 pm

2018 ஆம் ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையில் கேரள மாநிலம் பெரும் வெள்ளத்தில் தத்தளித்தது.பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.இந்த இயற்கை பேரிடர் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு மலையாள இயக்குனர் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் ‘2018’.

பெரும் வசூல் சாதனை படைத்தது 2018 திரைப்படம்.படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு கேரளா வெள்ளத்தில் தானும் சிக்கி இருப்பதை போன்ற உணர்வு ஏற்படும் அளவிற்கு படத்தை இயக்கியிருந்தார்.

இவர் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் படம் இயக்குவதாக அறிவித்து இருந்தார்.ஜூட் ஜோசப் ஆண்டனி விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இப்போது நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!