தமன்னா ஓரமா போயி உட்காருமா… காவாலா பாடலுக்கு வெறித்தனமா ஆடி தெறிக்கவிட்ட சிம்ரன் – வீடியோ!

Author: Shree
13 July 2023, 7:56 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் காவாலா என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆனது. இதில் தமன்னாவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் சிம்ரன் காவாலா படத்தின் பாடலுக்கு செம எனர்ஜியாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாக தமன்னாவை காட்டிலும் சிம்ரன் அருமையாக நடனமாடியிருப்பதாக கூறி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!