சிகரெட் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இவர்? இம்புட்டு அழகா என ரசிக்கும் நெட்டிசன்கள்…!

12 July 2021, 8:37 pm
Quick Share

கொரோனா ஆரம்பிப்பதற்கு முன் திரையரங்குகளில் படம் பார்த்த காலத்தில் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு சிகரெட்டை கைவிடுங்கள் என்ற விளம்பரம் அதிக ஃபேமஸ் ஆனது. அப்படி எடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில் ஒரு தந்தை தன் மகளின் அருகில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போல ஒரு காட்சி இருக்கும்.

அந்தக் குழந்தையின் காரணத்தால் அவர் சிகரெட்டை கை விடுவது போன்று காட்சி அமைந்திருக்கும். அந்தக் குழந்தை இப்போது பெரியாளாகி மாடர்னாக வளர்ந்திருக்கிறார். அந்த விளம்பரம் 2008 ஆம் ஆண்டு செய்தி மற்றும் ஒளிபரப்பு துறையால் தயாரிக்கப்பட்டது. அப்போது அந்த குழந்தைக்கு 7 வயது ஆக இருந்தது.

தற்போது 13 வருடங்கள் கழித்து டீன் ஏஜ் பெண்ணாக வளர்ந்து நிற்கிறார். இவரது பெயர் சிம்ரன் படேகர். அவரை படங்களில் நடிக்க வைக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். தென்னிந்திய சினிமாவிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரது தற்போதைய புகைப்படம் வைரல் ஆகி வருவது மட்டும் இல்லாமல் இவரது இன்ஸ்டாகிராமில் ரசிகர் வட்டம் கூடிக்கொண்டே வருகிறது.

Views: - 407

30

2