வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்ததே நான் தான் – வாய்விட்டு மாட்டிக்கொண்ட பிரபல நடிகர்!

Author: Shree
23 March 2023, 1:47 pm
vadivelu
Quick Share

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவரான சிங்கமுத்து சூர்ய வம்சம், நீ வருவாய் என ஆரம்பித்து ஆர்யாவின் ராஜா ராணி போன்ற சமீபத்திய முதன்மை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் வடிவேலு உடன் சேர்ந்து பல்வேறு காமெடிகளில் நடித்து கலக்கியுள்ளார். அதன் பின்பு இருவரும் நண்பர்களாகவே திரைப்படத்துறையில் வலம் வந்தனர். மேலும் நடிகர் வடிவேலுவின் மேலாளர் ஆகவும் சிங்கமுத்து இருந்தார். பின்னர் திடீரென இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

அதாவது நடிகர் வடிவேலு படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங்கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இன்னொரு இடத்தை போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் ரூ.12 லட்சத்துக்கு விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவத்தால் வடிவேலு சிங்கமுத்து வடிவேலு மீது கொலை மிரட்டல் புகார் ஒன்றைக் கொடுத்தார். இதனை சிங்கமுத்து கைது செய்யப்பட்டு 13 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசியுள்ள சிங்கமுத்து,

அவருக்கு புலிகேசி பட வாய்ப்பை வாங்கிக்கொடுத்தாதே நான் தான் என கூறியுள்ளார்.இதை கேட்டதும் நெட்டிசன்ஸ் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். என்னது அவ்வளோவ் பெரிய நடிகருக்கு நீ வாய்ப்பு கொடுத்தியா? விட்டால் வடிவேலுவை வாழவச்சதே நான்தான்னு சொல்லுவ போல என கிண்டலடித்துள்ளனர்.

https://www.facebook.com/watch/?v=1128009321199556&ref=sharing

Views: - 371

2

1