ஒரே நைட்ல மொத்த பிரச்சனையை தீர்க்கணும்.. வித்தியாசமான கதைக்களத்துடன் ‘சிங்கப்பூர் சலூன்’ டிரைலர்..!(வீடியோ)
Author: Vignesh18 January 2024, 2:36 pm
ஆர் ஜே-வாக தனது கெரியரை தொடங்கி ஆர்ஜே பாலாஜி தற்போது இயக்குனர், நடிகர் என பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய LKG, மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது.
கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படமும் அதிக அளவில் ரீச்சானது. ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ரன் பேபி ரன் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்து இருந்தார்.
இந்நிலையில், கோகுல்ராஜ், பாலாஜி, சத்யராஜ், லால், கிஷான்தாஸ், மீனாட்சி சவுத்ரி என பலர் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இந்த படம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Views: - 176
0
0