கோரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்

15 August 2020, 4:34 pm
spb - updatenews360
Quick Share

பாடகர் எஸ்பிபி உடல்நிலை சீராக இருப்பினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முன்னணி பாடகர் எஸ்.பி.பி-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலரும் தொலைபேசியில் அழைத்ததால், உடனடியாக ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், தனக்கு லேசான கரோனா தொற்று தான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்று அந்த வீடியோ பதிவில் எஸ்.பி.பி பேசியிருந்தார்.

எஸ்.பி.பி உடல்நிலையில் எந்தவித பிரச்சினையுமின்றி நலமாக இருப்பதாக நேற்று கடந்த ஆகஸ் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனிடையே, நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் மூலம் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்தநிலையில், எம்.ஜி.எம் மருத்துவமனை இன்று பிற்பகம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் எஸ்பிபி-யின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், இருப்பினும் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீண்டுவர வேண்டும் என, பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்தனை செய்து வருகின்றனர்.

Views: - 44

0

0