கொக்கைன் அடிச்சப்போ நமக்கு பையன் இருக்கான்னு தெரியாதா? ஸ்ரீகாந்தை வெளுத்து வாங்கிய சுசித்ரா…
Author: Prasad25 June 2025, 2:17 pm
நடிகர் ஸ்ரீகாந்த் கைது
போதை பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள செய்திதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்தை வைத்து “தீங்கரை” என்ற திரைப்படத்தை தயாரித்த பிரசாத் என்பவர் அதிமுகவின் முன்னாள் IT Wing நிர்வாகியாக செயல்பட்டவர். நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மதுவிடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இவரை போலீஸார் கைது செய்தது.
இவரை விசாரத்ததில் பிரதீப் என்பர் இவருக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பிரதீப்பிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் கேட்டதாக கூறி பிரசாத் தன்னிடம் கொக்கைன் வாங்கிச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர்.

அவரது இரத்தமாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து எழும்பூர் 14 ஆவது பெருநகர உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
என் மகனை பார்த்துக்கொள்ள வேண்டும்…
இதனிடையே நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னுடைய மகனை பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் போதை பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
கொக்கைன் பயன்படுத்தும்போது இது தெரியலையா?
இந்த நிலையில் பிரபல பாடகி சுசித்ரா இது குறித்து ஒரு பிரபல ஊடகத்தில் பேட்டியளித்திருந்தார். அதில் பேசியபோது, “ஸ்ரீகாந்த் அவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஜாமீன் கேட்கிறார். நீ கொக்கைன் அடித்தபோது உனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று நீ யோசிக்கவில்லையா? நீ படப்பிடிப்பில் இருக்கும்போது குழந்தைக்கு ஜுரம் என்றால் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிடுவாயா என்ன?

ஸ்ரீகாந்த் அல்லாமல் ஒரு சாதாரண ஆள் இப்படி என்னுடைய குழந்தையை பார்க்கப் போகவேண்டும் என்று சொன்னால் விடுவார்களா? இவர்களுக்கு என்று ஒரு தனி சட்டமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
