மீண்டும் சுஜி லீக்ஸ் ! வந்துவிட்டார் சுஜித்ரா – சுஜி லீக்ஸ் பற்றி மனம் திறக்கும் வைரல் நாயகி !

6 December 2019, 3:57 pm
Quick Share

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கியவர் என்றால் அது பிரபல பாடகி சுஜித்ரா தான். கடந்த 2014 ம் ஆண்டு தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் உறையவிட்டவர் சுஜித்ரா.

அப்போது தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் சுஜித்ரா. இருப்பினும் அவர் தான் இந்த வேலைகளை செய்கிறார் என்று தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து அவரது கணவர் நடிகர் கார்த்திக் தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் சுஜித்ரா மன ஓய்விற்காக வெளிநாடு சென்று அங்கு ஓய்வெடுத்து வந்தார்.

தற்போது அங்கிருந்து திரும்பி வந்த சுஜித்ரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ” அந்த வீடியோக்கள் உண்மையா, பொய்யா என்றெல்லாம் எனக்கு தெரியாது. அது மார்பிங் செய்யப்பட்டவையாக கூட இருந்திருக்கலாம்” என்று தோசையை திருப்பி போடுவது போய் தோசை கல்லயே திருப்பி போட்டு விட்டார். இதைத்தொடர்ந்து தற்போது நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்ட பொழுது வெளிநாட்டில் இருந்த காலங்களில் சமையல் கலையின் நுணுக்கங்கள் பற்றி கற்றறிந்தேன். தற்போது ஒரு யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதில் சமையல் குறித்து சொல்லித்தர போவதாக கூறியுள்ளார் சுஜி.