துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியான சம்ம மெலடி பாடல் ! Vintage Harris Jeyaraj Is Back !

By: Udayaraman
8 October 2020, 8:22 pm
Quick Share

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.இவருடைய படத்தின் தலைப்புகள் செந்தமிழில் தான் இருக்கும். இவருக்கு தமிழில் மீது இருக்கும் பற்றை காட்டுகின்றது. தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருடைய சமீப கால படங்கள் AYM, ENPT மேலும் பல படங்கள் அடிக்கடி சிக்கலை சந்தித்தன. மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாய்ஸ் ஓவர் வைத்தே ரிலீஸ் செய்துவிட்டார், படம் படுதோல்வி.

தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ தீயாய் பரவி வரும் நிலையில், எல் விஜய் வெங்கட்பிரபு நலன் குமாரசாமி போன்ற ட்ரெண்டிங் இயக்குனர்களுடன் சேர்ந்து குட்டி ஸ்டோரி என்னும் ஆன்காலஜி படத்தை இயக்கியுள்ளார். அதன்பிறகு புத்தம் புதுக்காலை என்று இன்னொரு படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் புரொமோஷன் வேலைகளை பார்த்து வருகிறார். தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஓ மனமே’ என்னும் துருவ நட்சத்திரத்தின் பாடலை வெளியிட்டுள்ளார்.

Views: - 53

0

0