சிவாஜி வாரிசு நடிகரை இயக்கும் சீனு ராமசாமி
28 January 2021, 7:26 pmதமிழ் சினிமாவில் நடிப்பு என்பதற்கு அதற்கு அர்த்தம் எழுதினால் சிவாஜி பெயரைத்தான் முதல் எழுதுவார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் சிவாஜி கணேசன். அவரை தொடர்ந்து அவரது வாரிசுகளான பிரபு, ராம்குமார் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, சிவாஜி தேவ் ஆகியோர் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது சிவாஜி குடும்பத்தின் இன்னொரு வாரிசும் நடிப்பதற்காக தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். சிவாஜி மகனான ராம்குமார் அவர்களின் மகனான தர்ஷன் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணேகலைமானே, நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி இந்த படத்தை இயக்கவுள்ளார்.
எப்போதும் கிராமத்து சப்ஜெக்ட் ஆக படம் இயக்கும் சீனு ராமசாமி இந்த படத்தையும் கிராமத்து ஸ்டைலில் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில், நடிகர் நடிகைகள், மற்றும் படத்தை பற்றி அதிகார அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
0