மகனுக்கு தன் அப்பாவின் பேர் வைத்த சிவகார்த்திகேயன் – என்ன பேர் தெரியுமா ?

Author: Udhayakumar Raman
3 August 2021, 6:50 pm
Quick Share

காவலருக்கு மகனாக பிறந்து, அடையாத துன்பம் எல்லாம் அடைந்து, பண்ணாத முயற்சி எல்லாம் எல்லாம் மேற்கொண்டு , பின் சிறிது சிறிதாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, இன்று தமிழில் Top 5 முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

கலக்கப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டு பின் ஜோடி நம்பர் வன் தொகுப்பாளராக மாறினார், அதன் பின் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் பின் பாண்டிராஜ் புண்ணியத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இன்று தமிழில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா, வாழ் என்கிற படங்களை தயாரித்து உள்ளார். கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு செய்ய வந்த சிவகார்த்திகேயன் மற்றும் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதை அறிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். சில நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து இவரது சமூக வலைதளங்களில், “மகனுக்கு குகன் தாஸ்” என்று பெயரிட்டதாக கூறியுள்ளார்.

Views: - 454

21

0