அஜித்தோட கோபத்திற்கு ஆளாக விரும்பல… இந்த படம் வேண்டாம் : மீண்டும் அப்செட்டில் விக்னேஷ் சிவன்..!

Author: Vignesh
22 March 2023, 11:30 am

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் விஜயை தொடர்ந்து அதிக வசூல் கொடுக்கும் ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். தற்போது நடிகர் அஜித் தொடர்ந்து தமிழில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார்.

Ajith - Updatenews360

நடிகர் அஜித் நடித்து இந்த வருடம் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வரை துணிவு படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது பெரும் விவாதமாக இருந்து வருகிறது.

இதனிடையே, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படத்தின் கதை அஜித்துக்கு பிடிக்காத காரணத்தால் தற்சமயம் இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் நடிக்க மறுத்த கதையில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். ஆனால், சிவகார்த்திகேயன் நடித்து ஒருவேளை படம் பெரும் ஹிட் கொடுத்துவிட்டால் அஜித்திற்கும் சிவகார்ர்த்திகேயனுக்குமிடையே விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதை உணர்ந்த சிவகாத்திகேயன் அந்த கதையில் நடிக்க விருப்பமில்லை என கூறி மறுத்துவிட்டார்.

sivakarthikeyan-Updatenews360-1

இந்த நிலையில் அந்த கதையில் நடிப்பதற்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை கமல் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

  • 90 percent reviewers are paid reviewers said by 96 director இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?