சூரியை ட்விட்டரில் படு பங்கமாக கலாய்த்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் அவர்களது வலைப்பேச்சு

3 February 2021, 10:35 pm
Quick Share

படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடைந்த நட்சத்திரங்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக தனது பயணத்தை தொடங்கியவர், அதன்பின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறி, விஜய் அவார்ட்ஸ் தொகுப்பாளராகி, வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்தார். ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் குழந்தைகள் அதிகமாக கவர்ந்த சிவகார்த்திகேயன், தனது திரைப்படங்கள் மூலமாக மாபெரும் உச்சத்தை அடைந்தார்.

தற்போது டாக்டர் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயன், அந்த படத்தில் வரும் செல்லம்மா பாடலின் மூலம் குழந்தைகளை மீண்டும் கவர்ந்துள்ளார். இவர் நடிக்கும் படங்களில் கிராமத்து கதைகளில் உடன் நடிக்கும் சூரி, இவரது அடுத்த படமான டான் படத்திலும் உடன் நடிக்க உள்ளார்.

அதன்பொருட்டு சூரி இவரை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார். அதில் ஆங்கிலத்தில் டைப் செய்துள்ள சூரி, “உங்களுடன் மீண்டும் திரையை பகிர்வதில் மகிழ்ச்சி, சீ யூ அட் கேம்பஸ், #don ” என தனது பாணியில் ட்வீட் செய்துள்ளார். அதற்கு ரிப்ளை செய்துள்ள சிவகார்த்திகேயன், “படி முதலில் ட்வீட்ட ஒழுங்கா படி, அம்புட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்று கலாய்த்து உள்ளார். இவர்களது வலைப்பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 40

0

0