உன்ன யாரு இவ்ளோவ் சீக்கிரமா கல்யாணம் பண்ண சொன்னது? சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு ரசிகையா?

Author: Shree
26 July 2023, 8:54 am

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார். கடைசியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்த ஒன்பதாம் ரசிகர்களிடையே நலன் விமர்சனத்தை பெற்றது.

அதையடுத்து சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் முழுவீச்சில் தயாராகியிருக்கிறார். இதனிடையே ராஜ்குமார் பெரியசாமி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் வரை ஹேர்ஸ்டைல் வெளியே காட்டக்கூடாது என கண்டீஷன் போட்டதால் சிவகார்த்திகேயன் சமீப நாட்களாக தொப்பியுடன் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் white and white ட்ரஸில் செம ஹேண்ட்ஸம்மாக இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட, அதை பார்த்த சிவகார்த்திகேயனின் தீவிர பெண் ரசிகை ஒருவர், உன்ன யாரு இவ்ளோவ் சீக்கிரமா கல்யாணம் பண்ண சொன்னது? என கமெண்ட்ஸ் செய்ய அதற்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்துள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?