கோடி கோடியா கொட்டும் வசூல்… பஞ்சத்தில் அடிபட்டது போல் பரிசு கொடுத்த SK – யாருக்கு தெரியுமா?

Author:
9 November 2024, 12:47 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்னர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் இருந்து வந்தார்.

இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய போது நடனம் காமெடி டைமிங் டயலாக் உள்ளிட்ட தன்னுள் ஒளிந்திருந்த பல திறமைகளை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

Amaran

இதன் மூலம்தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. அதை மிகச் சரியாக ஆரம்பத்தில் இருந்தே பயன்படுத்திக்கொண்டார். சிவகார்த்திகேயன் முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் இவர் நடிகராக அறிமுகம் ஆனார் .

முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்து அவரது நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இதனால் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வந்தது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார் .

அதை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா,எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , மான் கராத்தே , காக்கிசட்டை, ரஜினி முருகன் , வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் ,மாவீரன் , அயலாம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த ராணுவ வீரரானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எமோஷ்னலாக டச் செய்துவிட்டார். இந்த திரைப்படம் வெளிவந்து இதுவரை 200 கோடி வசூலை எட்டி விட்டதாக சமீபத்திய தகவல்கள் கிடைத்திருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனின் திரைப்பட கெரியரிலே இந்த திரைப்படம் தான் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

Gv Prakash

இப்படியாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த இந்த திரைப்படத்திற்கு தற்போது வெற்றி விழா தொடர்ந்து நடத்தப்பட்டு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் . இந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் செய்துள்ள ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது

அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷுக்கு அமரன் படத்தின் வெற்றியால் நெகிழ்ந்து போய் அவருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த வாட்சின் விலை ரூ. 122355.57 என்பது குறிப்பிடத்தக்கது.

கோடி கோடியாய் வசூல் ஈட்டி ரூ.200 கோடி நெருங்கி இருக்கிறது அமரன் படத்தின் வசூல். இதற்கு மிக முக்கிய பங்களிப்பாளராக படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் இருக்கிறார் . அப்படி இருக்கும்போது அவருக்கு ஏதேனும் விலை உயர்ந்த கார் பரிசாக கொடுக்காமல் சிவகார்த்திகேயன் இப்படி ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசாக கொடுத்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

முன்னதாக ரஜினி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளரான அனிருத்தற்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் லக்சரி கார் ஒன்றே கொடுத்து அவரை மகிழ்ச்சி அடைய வைத்தார்.

அனிருத்துக்கு மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் உள்ளிட்டோருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மிகப்பெரிய சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது. எனவே அவர்களை எல்லாம் பார்த்து சிவகார்த்திகேயன் கற்றுக் கொள்ள வேண்டும். தனக்காக பணியாற்றி போடி கோடியாய் வசூல் ஈட்ட மிக முக்கிய காரணமாக இருந்த தன்னுடைய பட குழுவினருக்கு அவர் ஒரு கோடி ரூபாயில் பரிசு கொடுத்தால் அது தகும் என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 108

    0

    0