அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்? சூர்யாவை நெருங்க விடாத சிவகார்த்திகேயன்!

Author:
12 November 2024, 12:27 pm

சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீசுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்களில் எடுக்கப்பட்டிருக்கிறது.

Kanguva Records in Telugu States

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஒட்டுமொத்த திரை விரும்பிகளின் எதிர்பார்ப்பு கூடிய படமாக தற்போது இருந்து வருகிறது.

ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3 Dயில் உருவாகும் இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அமரன் திரைப்படம் பெரும் சிக்கல் கொடுத்துள்ளது. ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் அமரன்.

amaran

இந்த திரைப்படம் தொடர்ந்து நாளுக்கு நாள் வசூலை அதிகரித்து வரும் சமயத்தில் அடுத்ததாக வெளிவரும் சூர்யாவின் கங்குவார் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் தத்தளித்து வருகிறார்கள். திரையரங்கு உரிமையாளர்களே அமரன் திரைப்படத்தை தியேட்டரில் இருந்து தூக்க மறுக்கிறார்களாம்.

அதனால் திரையரங்குகள் கிடைப்பதில் கங்குவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வந்து இருந்து வரும் சூர்யாவுக்கு சிவகார்த்திகேயன் தற்போது பெரும் போட்டியாக நிலவி வருவது சினிமா வட்டாரத்தில் சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஒரே பேச்சாக இருக்கிறது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 212

    0

    0