என்னை சில பேர் திட்டுறாங்க.. ஹேட்டர்ஸ்களுக்கு பதில் கூறிய சிவகார்த்திகேயன்..!

Author: Vignesh
27 December 2023, 2:00 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இந்நிலையில், படம் வருகிற ஜனவரி மாதம் 2024 பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில், அயலான் படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பேட்டியளித்துள்ளார். இந்த படத்திற்காக சம்பளம் வாங்காமல் இருந்ததை இவர் பகிர்ந்து உள்ளார்.

சமீபத்தில், நடைபெற்ற அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னை வெறுப்பவர்களை குறித்த சைலென்டாக பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பட்டாசு போல் பேசி வந்த சிவகார்த்திகேயன் என்னை சூப்பர் இன்ஸ்பிரேஷன்னு சொல்லுவாங்க, சில பேரு திட்டுறாங்க… ஆனால், நான் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்றும், நான் ஒன்றுமே செய்ய விரும்பவில்லை.

sivakarthikeyan-updatenews360

என்னை பிடித்தவர்களுக்காக எப்போதும் போல் என் வழியில் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் பாசிட்டிவாக பேசியிருக்கிறார். மேலும், இமான் பிரச்சனை குறித்து பேட்டியிலும் சரி, நிகழ்ச்சியில் பேசும் போதும் கூட ஒரு வார்த்தை கூட பேசாமல் சிவகார்த்திகேயன் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!