சிவகார்த்திகேயன் போட்டோ ட்வீட் – ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

27 February 2021, 4:35 pm
Quick Share

டாக்டர் படத்தின் அடுத்தடுத்து சிங்கிள் பாடல்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ள சிவகார்த்திகேயன், கலைமாமணி விருது பெற்றதன் மூலம் அவரும் குஷியாக இருக்கிறார். அடுத்து டான் படத்தில் நடித்து வரும் அவர் எட்டு வருடங்களுக்கு முன் போட்ட ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே சென்றிருக்கும் நிலையில், தற்போது வாகனம் வைத்திருப்பவர்கள், அதை விட்டுவிட்டு நடந்தே போகலாம் என்று நிலைக்கு எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் வரதட்சணையாக பெட்ரோல், கேஸ் ஆகியவற்றை கேட்டாலும் கேட்பார்கள் என்ற மீம்ஸ்களும் பரவி வருகிறது.

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு பெட்ரோல் விலை ஏற்றத்தை கலாய்க்கும் வகையில் சிவகார்த்திகேயன் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில்… பெட்ரோல் பங்க் பையன் – சார் எவ்வளவுக்கு பெட்ரோல்.? திருவாளர் பொதுஜனம் – ஒரு ரெண்டு ரூபாய்க்கோ, 4 ரூபாய்க்கோ வண்டி மேல தெளிச்சு விடு.. வண்டிய கொடுத்திட்டு போறேன்.. என்று உள்ளது.

இதை தோண்டி எடுத்த அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயன் அப்பவே இதை கண்டுபிடித்து விட்டார்.. அவர் ஒரு தீர்க்கதரிசி.. என புகழாரம் சூட்டி வருகின்றனர். அதேநேரம் ‘அப்போது ட்வீட் போட்டவர், தற்போது ஏன் எதுவும் போடவில்லை? என அவரை திட்டி வருகின்றனர்.

Views: - 4

38

1