ஏற்கனவே வாங்குன அடி பத்தாதா? மீண்டும் ஒரு சைன்ஸ் ஃபிக்சன் படத்தில் சிவகார்த்திகேயன்?

Author: Prasad
19 July 2025, 6:40 pm

சுமாரான வரவேற்பை பெற்ற அயலான்

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அயலான்”. ஏலியன் கதையம்சத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 

Sivakarthikeyan to be act in science fiction movie again after ayalaan

இத்திரைப்படம் தொடங்கப்பட்ட ஆண்டு 2018. ஆனால் பல பொருளாதார சிக்கல்கள் காரணமாக இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான  பணிகளில் தாமதம் ஏற்பட்டது. மிகச்சரியான காலகட்டத்தில் இத்திரைப்படம் வெளியாகாமல் தாமதமாக வெளியானதே இத்திரைப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு சைன்ஸ் பிக்சன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணி

வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

“மாநாடு” திரைப்படம் போலவே டைம் லூப் கான்செப்ட்டும் இத்திரைப்படத்தில் உள்ளதாம். இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Sivakarthikeyan to be act in science fiction movie again after ayalaan

“அயலான்” திரைப்படம் ஏற்கனவே தோல்வியை தழுவிய நிலையில் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது “மதராஸி”, “பராசக்தி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!