தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை சீண்டி பார்க்கும் சிவகார்த்திகேயன்? அப்படி என்ன சொன்னாரு?
Author: Prasad2 September 2025, 2:00 pm
விரைவில் களமிறங்கும் மதராஸி!
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் இதில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரசாத் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

தெலுங்கு படம் 1000 கோடி அடிப்பதற்கு காரணம்?
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த “மதராஸி” திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்த படத்தை திருப்பதி பிரசாத் தயாரித்துள்ளார். கதை சிறப்பாக இருந்தால் அவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். அதனால்தான் தெலுங்கு சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவிக்கும் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன” என கூறினார்.
சிவகார்த்திகேயன் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “அப்படி என்றால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கதை நன்றாக இருந்தாலும் செலவழிக்க தயங்குவார்கள் என சிவகார்த்திகேயன் மறைமுகமாக கூற வருகிறாரோ?” என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
