சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் Release தேதி அறிவிப்பு !

3 February 2021, 12:47 pm
Quick Share

சில மாதங்களுக்கு முன், சென்சார் முதற்கொண்டு பக்காவாக முடித்து ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் எல்லாம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி தயாரிப்பாளர்களுக்கும் சரி நஷ்டம் மட்டுமே மிஞ்சியது. இதை அழகாக Smell செய்த, ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்த ஆரம்பித்தன. இதன் மூலம் அவர்கள் புதிய Subscribers ஐ ஏற்ற முடியும் என்று.

பொன்மகள் வந்தாள், பெங்குயின், சூரரைப் போற்றுகூட OTT வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஓடிடி ரிலீஸ் நெட்பிளிக்ஸ் என தகவல் வெளிவந்தது. தற்போது ஓடிடியில் ரிலீஸ் இல்லை, வழக்கம்போல் முதலில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின் ஓரிரு மாதங்களுக்குப் பிறகே ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் டாக்டர் படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 25

0

0