பாக்ஸ் ஆபிஸில் மோதும் டான் அண்ட் சூர்யா40 மூவிஸ்!

6 February 2021, 7:36 pm
Quick Share

சூர்யா40 மற்றும் டான் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்கள் உருவாகியுள்ளன. அண்மையில், டாக்டர் படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துக் கொடுத்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, அவந்திகா மோகன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மார்ச் 26 ஆம் தேதி டாக்டர் படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அல்லது வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா மற்றும் சூரி ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு, வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டான் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதே நாளில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் சூர்யா40 படமும் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40ஆவது படமான சூர்யா40 படத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்காத நிலையில், வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சூர்யா40 படமும், டான் படமும் ஒரே நாளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனது. சூர்யா40 மற்றும் டான் ஆகிய இரு படங்களும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0