பட வாய்ப்பில்லாமல் தவிப்பு… கிளாமருக்கு மாறிய சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நடிகை!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2025, 4:35 pm

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழி உண்டு. இது சினிமாத்துறைக்கு மிக பொருத்தம் என்றே சொல்லலாம். காரணம் வாய்ப்பு கிடைக்கும் வரை தான் கோலோச்ச முடியும் என்பதை உணர்த்துகிறது.

அப்படி வாய்ப்பை சரியாக பயன்படுத்தியவர்கள்தான் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவர். அந்த விஷயத்தில் பிரியங்கா மோகனுக்கு இறங்குமுகம்தான். சரியான கதையை தேர்வு செய்யாமல் 2 பட ஹிட்டுகளை வைத்து தமிழ் சினிமாவை சுற்றி வருகிறார்.

இதையும் படியுங்க: இனிமே இப்படி பண்ணீங்கனா அவ்வளவுதான்!- ரவி மோகன்-ஆர்த்தி வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

ஆனால் டாக்டர், டான் தவிர மற்ற படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. இரண்டு படமும் சிவகார்த்திகயேன் படம். மேலும் சூர்யாவுடன் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் இல்லாததால் அந்த படம் தோல்வியை தழுவியது.

தொடர்ந்து வெளியான கேப்டன் மில்லர் படமும் தேர்ல்வியை தழுவியது. பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் பிரியங்கா மோகனுக்கு, தனுஷ் இயக்கிய நிலவுக்க என் மேல் என்னடி கோபம் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட தான் வாய்ப்பு கிடைத்தது.

அதோடு சரி வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. தற்போது தெலுங்கில் ஒரு படத்தை மட்டும் வைத்துள்ள அவர், கிளாமருக்கு மாற முடிவெடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கொஞ்சம் மெறுகேறி, அடையாளமல் தெரியாமல் மாறிப் போன பிரியங்கா மோகனின் வீடியோவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • kamal haasan said that dont forget we are all dravidians in thug life promotion ஹிந்திக்கு எதிராக பேசி வம்பிழுத்த கமல்- பட புரொமோஷன்லையும் அரசியலை விடமாட்டிக்கிறாரே!
  • Leave a Reply