பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்:திரையுலகினர் இரங்கல்!

Author: Udhayakumar Raman
28 November 2021, 9:46 pm
Quick Share

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் சிவசங்கர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து இருந்து வந்தார்.அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டரின் மகன் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தனுஷ், சிரஞ்சீவி, சோனு சூட் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சிலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிவசங்கர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 200

0

0