10 ஆண்டுகளுக்குப் பின் இயக்குனராக கம்பேக் கொடுக்கும் எஸ்ஜே சூர்யா? ஆச்சரியத்தில் மூழ்கடித்த அப்டேட்…

Author: Prasad
27 June 2025, 1:19 pm

இயக்குனர் டூ வில்லன் நடிகர்

சமீப காலமாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லன் நடிகராக கலக்கிக்கொண்டிருக்கும் எஸ்ஜே சூர்யா, ஒரு காலகட்டத்தில் தமிழின் வெற்றி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர். அஜித்தை வைத்து அவர் இயக்கிய “வாலி”, விஜய்யை வைத்து அவர் இயக்கிய “குஷி” ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாஸ் ஹிட் அடித்தது. 

அதனை தொடர்ந்து தான் இயக்கிய “நியூ” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் இயக்கி நடித்த “அன்பே ஆருயிரே” திரைப்படம் ஒரு புதுமையான காதல் திரைப்படமாக அமைந்தது. இந்த 4 திரைப்படங்களுக்குப் பிறகு எஸ்ஜே சூர்யா ஒரு நடிகராக பிசியாகிவிட்டார். எனினும் 2015 ஆம் ஆண்டு “இசை” என்ற திரைப்படத்தை இயக்கினார். 

sj suriya come back as a director with killer

அதன் பின் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். அதில் இருந்து வேறு எந்த திரைப்படத்தையும் எஸ்ஜே சூர்யா இயக்கவில்லை. எனினும் ரசிகர்கள் பலரும் எஸ்ஜே சூர்யாவை மீண்டும் இயக்குனராக பார்க்கவேண்டும் என விரும்பினார்கள்.

கம்பேக் கொடுக்கும் எஸ்ஜே சூர்யா

அந்த வகையில் தற்போது எஸ்ஜே சூர்யா 10 வருடங்களுக்குப் பிறகு இயக்குனராக கம்பேக் கொடுக்கவுள்ளார். கோகுலம் கோபாலன் தயாரிப்பில் எஸ்ஜே சூர்யா “கில்லர்” என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் அறிவித்துள்ள எஸ்ஜே சூர்யா, “ஹாய் நண்பர்களே, தனது கனவு பிராஜெக்ட்டுடன் உங்கள் இயக்குனர் எஸ்ஜே சூர்யா is back. கில்லர் என்பதை நீங்கள் அறிவீர்கள். மதிப்பிற்குரிய கோகுலம் கோபாலன் சாருடன் இணைந்து பணியாற்றவுள்ளது மகிழ்ச்சியை தருகிறது” என குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஜே சூர்யா இரு திரைப்படத்தை இயக்கவுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply