அவன்‌ திரும்பவும் வந்துட்டான்…எஸ்.ஜே சூர்யாவின் பதிவு… STR ரசிகர்கள் ஹேப்பி…!

Author: Selvan
30 January 2025, 3:53 pm

ரீ-ரிலீஸ் ஆகும் மாநாடு

கடந்த 2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாநாடு.இப்படத்தில் நடிகர் சிம்பு,எஸ் ஜே சூர்யா,கல்யாணி பிரியதர்சன்,பிரேம்ஜி,எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

Maanaadu re-release on Simbu birthday

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் சிம்புவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.இந்த நிலையில் தற்போது இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு திட்டமிட்டு வருகிறது.படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 வருடம் கழித்த பிறகு சிம்புவின் பிறந்த நாளை முன்னின்ட்டு,நாளை ஜனவரி 31ஆம் தேதி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் எஸ் ஜே சூர்யா தன்னுடைய X-தளத்தில் மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்ட வீடீயோவை டேக் செய்து,மீண்டும் மாநாடு வெளியாகவுள்ளது என்ற தகவலை அறிவித்துள்ளார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் சிம்பு பிறந்தநாளான பெப்ரவரி 3ஆம் தேதி அவருடைய அடுத்தடுத்து படங்களின் அப்டேட் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?