SK 23 படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு…ஒரு வேள இதுவும் பழைய டைட்டிலா இருக்குமோ.!

Author: Selvan
16 February 2025, 8:00 pm

SK பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK 23 படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடீயோவை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான (நாளை) பெப்ரவரி 17 ஆம் தேதி படக்குழு வெளியிட உள்ளது.இதனால் SK ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்துள்ள்ளது.

இதையும் படியுங்க: அஜித் சார் கூட நடிக்க வாய்ப்பு…விஜய்சேதுபதி இப்படி மிஸ் பண்ணிட்டாரே..எந்த படமா இருக்கும்.?

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு படக்குழு பராசக்தி என்ற சிவாஜிகணேசனின் பட டைட்டிலை வைத்துள்ளனர்,இதற்காக சிவாஜி மன்ற ரசிகர்கள் பராசக்தி டைட்டிலை பயன்படுத்த கூடாது என போராட்டம் செய்தனர்.

SK 23 Sigaram Title

சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்களுக்கு பழைய டைட்டிலை வைத்து வருவதால்,இப்படத்திற்கும் ஒரு பழைய படத்தின் டைட்டிலை வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது SK 23 படத்திற்கு சிகரம் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது,சிகரம் என்ற தலைப்பில் 1981 ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் நடித்துள்ளார்,தற்போது 44 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தலைப்பை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.நாளைக்கு படத்தின் அப்டேட் ரிலீஸ் ஆன பிறகே படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!