வாய்க்கு வந்தப்படி தப்பா பேசாதீங்க.. கைது வரை செல்ல இதுதான் காரணம்: விமர்சகர்களுக்கு பாலாஜி மனைவி நித்யா பதிலடி..!

Author: Vignesh
31 January 2023, 12:34 pm
balaji nithya - updatenews360
Quick Share

பக்கத்து வீட்டிலுள்ள காரை தாடி பாலாஜியின் மனைவி கல்லால் அடித்து உடைத்தார் என்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நித்யா தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

90களில் தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகராக இருந்தும், வடிவேலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடிகர் தாடி பாலாஜி கலக்கியவர். நடிகர் தாடி பாலாஜியின் யதார்த்தமான நடிப்பால் இவருக்கென பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவரின் காதல் மனைவி நித்யாவும் பாலாஜிக்கும் உள்ள சண்டை உலகறிந்த செய்தியாக மாறிவிட்டது.

balaji nithya - updatenews360

இந்த நிலையிலும் இவர்களுக்கு போஷிகா என்ற பெண்குழந்தை உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என பிரபல தொலைக்காட்சியால் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியின் மூலம் தான் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனை தொடர்ந்து நித்யாவும் பாலாஜிக்கும் இடையேயான சண்டைகள் எல்லைமீறிய நிலையில் கோர்ட், போலிஸ் என மிகவும் வைரலான நிலையில் இருவரும் சமீபகாலமாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.

balaji nithya - updatenews360

இந்த நிலையில் போஷிகாவுடன் தனியாக வாழ்ந்து வரும் நித்யா, பக்கத்து வீட்டிலுள்ள வயதான ஆசியர் ஒருவரின் காரை “நள்ளிரவில் கல்லால் அடித்து உடைத்ததாக” வழக்கு பதிவு செய்யப்பட்டு , விசாரனைக்காக நித்யா கைது செய்யப்பட்டது பெரும் வைரலானது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில் என்ன நடந்தது என சரியாக தெரியாமல் விமர்சகர்கள் கண்ட மாதிரி செய்திகளை பரப்பி வந்த நிலையில், இதற்கு நித்தியா பதிலடி கொடுத்துள்ளார்.

balaji nithya - updatenews360

அதில், “ அந்த வயதான ஆசியருக்கும் எனக்கும் ஏற்கெனவே சரி வராது என்றும், இதனால் அவர்களுடன் நான் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை எனவும், எனக்கும் என்னுடைய கணவருக்கும் பிரச்சனை நடக்கும் போது முழுக்க முழுக்க இவர்தான் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து அவரை பாலாஜிடம் இருந்து என்னை பிரித்தார்கள்.

மேலும் தன்னுடைய வீட்டில் நடக்கும் விசயங்களை தவறாக பாலாஜிக்கு சொல்வதே இந்த வயதான ஆசிரியர் தான். பாலாஜி தன்னை அடித்த போது நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இதன்போது எனக்கு பலத்த கோபம் வந்ததால் இவரை அவதூறாக பேசியது உண்மை என நித்யா தெரிவித்தார்.

balaji nithya - updatenews360

இதுகூறித்து மேலும் பேசிய நித்யா இப்போது இவரின் காரை உடைத்ததாக ஒரு பொய்யான தகவலை பரப்பியுள்ளார். ஆனால் இது உண்மையல்ல அந்த வீடியோ காட்சியில் இருப்பது நான் தான் என்றும், நான் “துணிவு” திரைப்படம் பார்ப்பதற்கு செல்லும் போது பதிவான காட்சி தான் அது என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுக்கான ரிவன்ஜ் எடுத்தே தீருவேன் எனவும், நானும் வழக்கு பதிவு செய்யப்போகிறேன் என பல கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

balaji nithya - updatenews360

இந்த செய்தியை நெட்டிசன்கள் இணையத்தில் தற்போது வைரலாக பரப்பி வருகிறார்கள். மேலும் குடும்ப பிரச்சினையால் ஏற்படும் விளைவுகள் என கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 168

0

1