கமல்ஹாசன் சங்கை அறுப்பேன்… மிரட்டல் விடுத்த சின்னத்திரை நடிகர் கைது?
Author: Udayachandran RadhaKrishnan11 August 2025, 10:44 am
நடிகர் சூர்யா நடத்திய அகரம் அறக்கட்டளையில் விழா கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூர்யா மூலம் உருவாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றனர்.
அகரம் மூலம் உருவாக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட பிரபலங்கள் பலர் பங்கேற்று சூர்யாவுக்கு வாழ்த்துக்களை பரிமாறினர்.
அப்போது அதில் பங்கேற்ற கமல்ஹாசன், சனாதனம் குறித்து பேசினார். சனாதனம் குறித்து எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்தார். இதற்கு சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சனாதனம் குறித்து பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்பேன் என பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசினார்.
இது சம்மந்தமாக மநீம துணைத் தலைவரும், ஒய்வு பெற்ற ஐஜியுமா மவுரியா தலைமையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எந்நேரத்திலும் நடிகர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
