3 வது முறையாக இறக்கிறேன்; பிரபல தொகுப்பாளருக்கு நேர்ந்த சங்கடம்

Author: Sudha
2 July 2024, 11:35 am

பாடல்களுக்கான போட்டிகள் எந்த சேனலில் வந்தாலும் அதற்கான தொடக்கமாக ரசிகர்களால் அறியப் படுபவர் பி. எச்.அப்துல் ஹமீத்.இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவர் தன் வசீகர குரலாலும் நினைவாற்றலாலும் புகழ் பெற்றார்.பாடல்கள் பற்றிய அவருடைய தேடல் மிக ஆழமானது.நிறைய திரைப் பிரபலங்களையும் திறமையாக பேட்டி கண்டுள்ளார்.சில யூடியூப் சேனல்களில் இவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது.

இது குறித்து பேசிய அவர்
நேற்று இலங்கை பத்திரிகைகளில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ‘மரணம் மனிதனுக்குத் தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து, அவனைப் பற்றிய நல்ல பக்கங்களை, நல்ல நினைவுகளை மட்டும் இறைமீட்டி பேசி மகிழ்வது’ என்று எழுதியிருந்தேன்.
இந்த வரிகளுக்கான
அனுபவம்தான் எனக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த தவறான தகவலை பார்த்து அன்பு உள்ளம் கொண்ட என்னை நேசிக்கும் பலர் என்னிடம் அழைபேசியில் அழைத்து பேசினர்.சிலர் அழுதனர். சிலர், இதுவரை காலமும் என்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பி இருக்கலாம். ஆனால், என்னுடைய இறப்புச் செய்தியைக் கேட்டது என்னைப் பற்றிய நல்ல நினைவுகளை மக்கள் மனதில் மீண்டும் எழுப்புவதற்கு காரணமாக இருந்திருக்கும். என்னை நேசிக்கும் மக்களின் இந்த அன்பும் நேசமும் நான் வாழும் காலம் வரை தொடர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!