ஊருக்குதான் உபதேசம்- பழைய வீடியோவை தோண்டி எடுத்து வன்மம்? போலீஸ் வளையத்தில் சிம்பு பட நடிகர்…

Author: Prasad
27 May 2025, 11:16 am

ஒஸ்தி பட வில்லன்…

பாலிவுட்டில் மிகப் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் சோனு சூட். இவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகராக விளங்கினாலும் இவர் அறிமுகமானது விஜயகாந்தின் “கள்ளழகர்” திரைப்படத்தில்தான். அதனை தொடர்ந்து தமிழில் “மஜ்னு”, “சந்திரமுகி”, போன்ற திரைப்படங்களில் நடித்த சோனு சூட், சிம்புவின் “ஒஸ்தி” திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அதே போல் விஷாலின் “மதகஜராஜா” திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

sonu sood got in trouble because of old video

இவர் அவ்வப்போது சமூக சேவைகளில் ஈடுபடுவது வழக்கம். அதே போல் பல சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபடுவார். இதனால் இவர் பலரது பாராட்டுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார். ஆனால் 2023 ஆம் ஆண்டில் இவர் செய்த ஒரு காரியம் இப்போது இவருக்கு வினையாகிப்போய் உள்ளது. 

ஹெல்மெட் அணியாமல் பயணம்

அதாவது 2023 ஆம் ஆண்டில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள Spiti Valley என்ற இடத்தில் ஹெல்மெட் அணியாமல் உடம்பில் மேலாடையின்றி சோனு சூட் பைக்கில் பயணித்தவாறு ஒரு வீடியோ வெளியானது. இந்த பழைய வீடியோவை இணையவாசி ஒருவர் திடீரென சமீபத்தில் வைரலாக்கிவிட அது போலீஸாரின் கவனத்திற்கு வந்துவிட்டது. 

சோனு சூட் சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டார். அந்த வகையில் சோனு சூட் ஹெல்மெட் மற்றும் மேலாடை இல்லாமல் பைக்கில் பயணிக்கும் வீடியோவை பகிரும் இணையவாசிகள், “ஊருக்குதான் உபதேசம்” என்பது போல் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சாலை விதிகளை மீறி செயல்பட்ட சோனு சூட் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என Lahaul & Spiti பகுதி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் சாலை விதிகளை மதித்து பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. 

  • Actor Rajesh Sudden Dead of Cardiac Arrest பிரபல நடிகருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனை செல்லும் போது உயிர் பிரிந்த சோகம் : தமிழ் திரையுலகம் ஷாக்!
  • Leave a Reply