ஆஸ்கர் விருது ரேசில் போட்டி போடும் சூரரைப் போற்று !

26 January 2021, 6:42 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்ட சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார் அதை தவிடுபொடி ஆக்கி விதத்தில் சூரரை போற்று பெரிய வெற்றி அடைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சூரரைப்போற்று மிக பெரிய Comeback கொடுத்தது.

தற்போது அந்த படத்திற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இதனால் மொத்த கோலிவுட்டும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

Views: - 0

0

0