உலகத்தின் சிறந்த படங்களின் ரேசில் மூன்றாவது இடம்பெற்ற சூரரைப் போற்று ! சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி !

18 May 2021, 4:22 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்ட சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார் அதை தவிடுபொடி ஆக்கி விதத்தில் சூரரை போற்று பெரிய வெற்றி அடைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சூரரைப்போற்று மிக பெரிய Comeback கொடுத்தது.

அதன் பின் இந்த படத்திற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியது. தற்போது உலக அளவில் அதிக ரேட்டிங் பெற்ற படங்களில் மூண்டறவது இடத்தை பிடித்து தமிழ் சினிமாவையே பெருமைப்பட வைத்துள்ளது.

அதாவது சூரரைப் போற்று திரைப்படம் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. நீண்ட நாட்களாக ஒரு தரமான சம்பவத்திற்கு காத்துக் கொண்டிருந்த சூர்யா ரசிகர்களுக்கு சூரரைப் போற்று படம் கறி விருந்தாக அமைந்துள்ளதால் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 199

3

0