தம்பிங்கனு சொல்றதுக்கே வெட்கமா இருக்கு, இது முட்டாள் தனம்- ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பான சூரி…

Author: Prasad
16 May 2025, 4:00 pm

சூரியின் “மாமன்”

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், ஸ்வாசிகா, யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் குடும்ப சென்டிமண்ட் திரைப்படமாக அமைந்துள்ளது. 

soori angry on his fans who ate sand rice in madurai temple

இத்திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். பல நாட்கள் கழித்து ஒரு நல்ல குடும்ப சென்டிமண்ட் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். 

மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

இன்று இத்திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த சூரி ரசிகர்கள் சிலர் திருப்பரங்குன்றம் கோயிலில் “மாமன்” திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக மண் சோறு சாப்பிட்டனர். இந்த நிலையில் சில மணிநேரங்களுக்கு முன்பு கமலா திரையரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சூரி தனது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டது குறித்து மிகவும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார். 

“மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என சொல்லி மதுரையைச் சேர்ந்த சில அன்பு தம்பிகள் மண் சோறு சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை அன்பு தம்பிகள் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக இருக்கிறது. தம்பிங்களா, இது ரொம்ப முட்டாள்தனமானது. கதை நன்றாக இருந்தால் படம் ஓடப்போகிறது. அதை விட்டுவிட்டு மண் சோறு சாப்பிட்டால் இந்த படம்  ஓடிவிடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த காசுக்கு யாருக்காவது தண்ணீர் வாங்கி கொடுத்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருக்கலாம். நிறைய பேருக்கு மோர் வாங்கி கொடுத்திருக்கலாம். நிறைய பேருக்கு சாப்பாடு போட்டிருக்கலாம்.

soori angry on his fans who ate sand rice in madurai temple

இது போன்ற செயல்கள் செய்பவர்கள் என் தம்பிங்களாக மட்டுமல்ல ரசிகர்களாக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்கள். நான் ஒரு வேளை சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டவன். அப்படி கஷ்டப்பட்டு தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். ஆனால் நீங்கள் அந்த சாப்பாட்டிற்கு மரியாதை தரவே  இல்லை. எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தயவு செய்து இது போன்ற செயலை இனி செய்யாதீர்கள்” என மிகவும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார் சூரி. இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

  • valaipechu anthanan criticize maaman movie scenes படத்தை பார்த்தால் எரிச்சலா வருது- மாமன் படத்தை பொளந்து கட்டும் பிரபலம்…
  • Leave a Reply