ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

Author: Prasad
17 June 2025, 10:59 am

பல வருடக் கனவு

கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சமயத்தில் இந்த புதிய கட்டிடத்தின் பணி தொடங்கியது. இதனிடையில் நிதி பற்றாக்குறை காரணமாக கலை நிகழ்ச்சிகளின் மூலமும் நிதி திரட்டப்பட்டது. 

இவ்வாறு நடிகர் சங்க கட்டிடம் கட்டி எழுப்பட்டு வந்த நிலையில் இதனிடையே தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலும் நடந்தது. இதில் நாசர் தலைமையிலான அணியும் பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட நாசர் தலைமையிலான அணி மீண்டும் வென்றது. இந்த தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இரு அணியினருக்குமிடையே வாக்கு வாதம் முற்றிய நிலையில் இக்கட்டிடப் பணிகள் முற்றாக நின்றுப்போயின. 

அதன் பின் வங்கியில் கடன் பெற்று இக்கட்டிடத்தை எழுப்பத் தொடங்கினர் சங்க நிர்வாகிகள். அதனை தொடர்ந்து கட்டிடப் பணிகளும் சீராக நடைபெற்ற நிலையில் தற்போது இக்கட்டிடம் இறுதி கட்டத்தில் இருப்பதாக நடிகர் சங்கம் சார்பாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

என்னென்ன அம்சங்கள்?

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் இப்புதிய கட்டிடத்தில் அமைந்துள்ள வசதிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்புதிய கட்டிடத்தில் மிகப் பெரிய ஆடிட்டோரியம், மாநாட்டு அரங்கம், சிறிய மாநாட்டு அரங்கம், சாப்பாட்டு மண்டபம், சங்க அலுவலகம், வாடகை அலுவலகத்திற்கான இடம், பார்க்கிங் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 19 கிரவுண்ட் இடத்தில் ரூ.30 கோடி பட்ஜெட்டில் இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்து மாதம் இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. 

விஷால் -தன்ஷிகா திருமணம் இந்த புதிய கட்டிடத்தில்தான் ஆகஸ்து மாதம் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தோஷத்தில் நடிகை சாய் தன்ஷிகா இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!