“அப்பாவிற்கு ஒன்றும் ஆகவில்லை, அவர் குணமாகி வருகிறார்” S.P. சரண் வெளியிட்ட வீடியோ…!

15 August 2020, 7:42 pm
Quick Share

நேற்று மருத்துவமனை, நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த பல தவறான தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக கருத்து பதிவிட்டு வந்தார்கள்.

தற்போது எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.சரண் கூறியிருப்பதாவது: “என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்துத் தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி”இவ்வாறு எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.