தப்பு தப்பா அறிக்கை வெளியிட்ட விஜய்… எழுத்து பிழைகளை சுட்டிக்காட்டி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Author: Rajesh
6 February 2024, 1:23 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அண்மையில் “தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். மிக விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து விஜய் தனது அரசியல் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்தது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்குக்கும் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ள விஜய்யை நெட்டிசன்ஸ் கலாய்த்து தள்ளியுள்ளனர். ஆம், அந்த அறிக்கையில் உள்ள பல எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டி அவரை விமர்சித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!