தனுஷ்தான் ஹீரோவா?.. பாலிவுட் எண்ட்ரிக்கு அப்போதே முட்டுக்கட்டை போட்ட பிரபல நடிகை..!

Author: Vignesh
23 May 2023, 5:30 pm

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்யாசமான கண்ணோட்டத்தில் படம் எடுப்பவர் இயக்குனர் செல்வராகவன். 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் தான் தனுஷையும் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு 2003ம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் தனுஷ் தான் ஹீரோ.

Kadhal_Konden dhanush-updatenews360

இதனிடையே, காதல் கொண்டேன் படத்தின் போது தனுஷ் எல்லாம் ஒரு நடிகரா என்று அவரின் உடலை பற்றி கிண்டல் செய்து அசிங்கப்படுத்தி பலர் வந்தார்கள். அப்போது தனுஷின் காதல் கொண்டேன் படத்தினை தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்தியில் ரீமேக் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

Kadhal_Konden dhanush-updatenews360

இந்தியில் செல்வராகவனே இயக்கவும் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க போனி கபூர் முடிவு செய்து, படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் வாங்கி போனி கபூர் வாங்கியுள்ளார். இதனால் கடுப்பான ஸ்ரீதேவி, என்னது தனுஷை வைத்து இந்தி ரீமேகை எடுக்க போகிறீர்களா? உங்களுக்கு என்னதான் ஆச்சு, எப்படி தனுஷ் இந்தியில் செட்டாவார் என்று ஷாக்கான ரியாக்ஷனோடு தெரிவித்து இருக்கிறார்.

Kadhal_Konden dhanush-updatenews360

ஆனால் போனி கபூர், பீகார் பகுதியில் இருந்து ஒரு பையன் படிக்க வருவது போல் காட்டிவிட்டால், தனுஷுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் அடுத்த நாளே தனுஷ் மற்றும், செல்வராகவனை அழைத்து அட்வான்ஸ் பணத்தையும் போனி கபூர் கொடுத்து உள்ளார். ஆனால் அந்த படம் ஏதோ ஒருசில காரணத்தால் எடுக்கமுடியாமல் போனது.

Kadhal_Konden dhanush-updatenews360

ஆனால் காதல் கொண்டேன் படம் வெளியாகியிருந்தால், தனுஷ் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து இருக்கலாம் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள்.

boney kapoor sridevi-updatenews360
  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 358

    0

    1