த்ரிஷாவுக்கே TOUGH கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்.. அப்படிப்போடு பாடலுக்கு அப்படியொரு குத்து..!(Video)

Author: Vignesh
14 May 2024, 12:35 pm

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளும் நடிகையுமான ஸ்ரீதேவி 1992இல் ரிக்சா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் ராகுல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

sridevi vijaykumar-updatenews360

திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன ஸ்ரீதேவி 37 வயதாகியும் இளமை மாறாமல் இன்னும் அதே அழகோடு இருந்து வருகிறார். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Sridevi Vijayakumar- updatenews360

அதாவது, சின்ன வயசில் இருந்தே வீட்டில் எல்லோரும் என்னை மிகவும் பாசமாக பார்ப்பார்கள். நான் அடம்பிடித்தால் என்னவேனாலும் செய்துவிடுவார்கள். எனக்கு ஒன்னு வேணும்னா வேணும் என்று அடம்பிடித்து சாதிப்பேன். ஆனால், அது நியமானதாக தான் இருக்கும். வீட்லயே அண்ணா, அக்கா எல்லாரும் சொல்லுவாங்க ஏன் அந்த பொண்ணுக்கு இவ்ளோவ் செல்லம் கொடுக்குறீங்க…. நீங்களே கெடுக்குறீங்க அவளன்னு சொல்லுவாங்க. ஆனால், பெரியவள் ஆனதும் அப்படியெல்லாம் பண்றதில்ல ரொம்ப ஸ்வீட் ஆகிட்டேன் என ஸ்ரீதேவி கூறி இருந்தார்.

இந்த நிலையில், தளபதி விஜயின் கில்லி படத்தில் இடம்பெறும் அப்படி போடு பாடத்துக்கு விஜய் டிவி பிரபலம் தொகுப்பாளரும் நடிகருமான ரியோவுடன் இணைந்து ஸ்ரீதேவி விஜயகுமார் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!