மயிலு மகளின் மனச இழுக்கப்போகும் அதர்வா… Root ஸ்ட்ராங்கா இருக்கும் போலயே – வேற லெவல் அப்டேட்!

Author: Shree
16 September 2023, 4:16 pm

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹேண்ட்ஸம் ஹீரோவாக இளம் பெண்ககளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா. முரளியின் மூத்த மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் அடிக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அழகு… நல்ல தோற்றம்… இளமை என பெண்கள்களின் பேவரைட் ஹீரோ லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார். அதன் பின்னர் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி , இரும்புக் குதிரை, சண்டி வீரன், ஈட்டி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், செம போத ஆகாதே, செம போத ஆகாதே, இமைக்கா நொடிகள், பூமராங், 100 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மக்கள் மனதில் பிரபலமான நடிகராக இடம்பிடித்திருக்கும் அதர்வா தற்போது விக்னேஷ் சிவனின் அசோசியேட் ஆகாஷ் இயக்கம் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அதர்வா கமிட் ஆகியுள்ளாராம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் இளைய மகள் குஷி கபூர் தான் நடிக்க உள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். டவ் டுடே இந்தி ரீமேக், பையா படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்டவற்றில் குஷி கபூர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara Talk Indirectly about Prabhu Deva இன்னொரு திருமணம் செய்வதில் தப்பே இல்லை : பகீர் கிளப்பிய நயன்தாரா!
  • Views: - 360

    0

    0