பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்க்கு இவ்வளவு பெரிய மகன் ? மகளா ? வைரலாகும் புகைப்படங்கள் !

2 March 2021, 11:30 am
Quick Share

தமிழ் சினிமவில் பிரபலமான நடிகரிகளில் ஒருவராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் வரவேற்பை பெற்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்தார்.

ரோஜா கூட்டம் படத்திற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவியது. கடைசியாக விஜய்யுடன் இவர் நடித்த நண்பன் திரைப்படம் மட்டுமே வெற்றிபெற்றது. அதன்பின்னர் இவர் நடித்த பல்வேறு படங்கள் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்க இருந்து பின்னர் வேறொரு நடிகருக்கு கைமாறிய பல வெற்றிப்படங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மாதவன் நடித்து சூப்பர் ஹிட் ஆன ரன் திரைப்டத்தில் ஸ்ரீகாந்துதான் நடிக்க இருந்ததாம். அதேபோல மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் இவர்தான் நடிக்க இருந்ததாம்.

மேலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற எம் குமரன் சன் ஆப் மகாலஷ்மி படத்தின் தெலுங்கு வெர்சனிலும் இவர்தான் நடிப்பதாக இருந்ததாம். இப்படி பல்வேறு வெற்றிப்படங்களை தவற விட்டுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.

தற்போது இவருடைய குடும்ப புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “உங்களுக்கு இவ்வளவு பெரிய பையன் பொண்ணு இருக்காங்களா?” என்று ஆச்சரியப்பட்டு என்று Likes – ஐ அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்.

Views: - 7

0

0