அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

Author: Prasad
4 July 2025, 7:43 pm

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் “பாகுபலி” திரைப்படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய “RRR” திரைப்படம் உலகளவில் ரூ.1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 

ssmb29 movie digital rights bagged by netflix

“RRR” திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக வாரணாசி நகரத்தையே செட் போட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. எனினும் இத்திரைப்படத்தை குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

ஓடிடியில் வியாபாரம்…

இவ்வாறு இத்திரைப்படம் இன்னும் அறிவிக்கபடாத  நிலையில் டிஜிட்டல் உரிமத்தில் மிகப் பெரிய வியாபாரத்தை பார்த்துள்ளதாம். அதாவது நெட்பிலிக்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை இதுவரை இல்லாத அளவில் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம். ஆனால் அதன் தொகை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

ssmb29 movie digital rights bagged by netflix

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் பிரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!