வேறு இயக்குனருக்கு கைமாறும் STR 50? அப்போ அந்த பிரம்மாண்ட பிராஜெக்ட்டோட நிலைமை?

Author: Prasad
23 June 2025, 4:48 pm

பிரம்மாண்ட பட்ஜெட்

சிம்பு தனது 49 ஆவது திரைப்படத்தில் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதனை தொடர்ந்து சிம்புவின் 50 ஆவது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த புராஜெக்ட் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில் தனது 50 ஆவது திரைப்படமாக இதனை அறிவித்தார் சிம்பு. இத்திரைப்படத்தை சிம்புவும் ஏஜிஎஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஃபேன்டசி திரைப்படமாக இது உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

str 50 movie director changed instead of desingh periyasamy

கைமாறிய STR 50?

இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி சிம்புவின் 50 ஆவது திரைப்படத்தை இயக்கப்போவதில்லை என ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சிம்புவின் 50 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கப்போகிறாராம். 

வெங்கட் பிரபு ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. 

str 50 movie director changed instead of desingh periyasamy

இந்த நிலையில் சிம்புவின் 50 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் அதன் பிறகே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவருகிறது. வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணியில் உருவான “மாநாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!