கருப்பு சார்…நெருப்பு சார்… வைரலாகும் சிம்புவின் புதிய புகைப்படம்!!
17 November 2020, 8:15 pmகருப்பு உடை அணிந்துகொண்டு நீச்சல் குளத்தில் நிற்கும் நடிகர் சிம்புவின் சமீபத்திய போட்டோ ஷூட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஊரடங்கில் உடல் எடையைக் குறைத்து மெலிவான தோற்றத்துடன் காட்சியளிக்கும் சிம்புவின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக நவம்பர் 14ஆம் தேதி வெளியானது. டீசரில் அவர் பேசும் பஞ்ச் டையலாக், தனித்துவமான நடை ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக தூண்டியிருக்கிறது.
இந்நிலையில் கருப்பு உடை அணிந்துகொண்டு நீச்சல் குளத்தில் நிற்பதுபோன்ற புகைப்படத்தை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.
ஈஸ்வரன் டீசரை இதுவரை 61 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், ரசிகர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் இயக்குனர் சுசீந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.