அர்ச்சனா வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம் ! உடனடியாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் அர்ச்சனா !

10 July 2021, 11:36 am
Quick Share

தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்பு கேங் என்று பலர் கலாய்த்து வந்தாலும் அசராமல் சுற்றிக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் என்ற வீடியோ வை பதிவிட்டு அதன் மூலம் பலரின் கலாய்களுக்கு உள்ளானார். அது வெவ்வேறு பிரச்சினையாக உருமாறி பெரிய இடத்துக்கு வந்து நின்றது. தற்போது அதெல்லாம் தீர்ந்து சுமுகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை, தற்போது மூளையில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக அறுவை சிகிச்சையில் செய்யப்போவதாக தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார். அதில், “எப்போதும் மனம் படி நடப்பவள் நான், ஆனால் என்னுடைய மூளை தற்போது நானும் இருக்கிறேன் என்று சொல்வது போல சிறு கோளாறாக மாறியுள்ளது.

அதாவது மூளையில் சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக எனது மகள் சாரா தெரிவிப்பார். இதிலிருந்து மீண்டு வந்து உங்களை சந்திக்கிறேன், அதுவரைக்கும் உங்களிடம் இருந்து விடைபெறுவது அர்ச்சனா” என்று உருக்கமாக சில புகைப்படங்களோடு பதிவிட்டுள்ளார்.

Views: - 199

0

0