ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சுஜா வருணி – ஆச்சரியத்தில் மூழ்கி போன ரசிகர்கள்

4 February 2021, 8:17 pm
Quick Share

மிகச் சின்ன வயதில் இருந்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என முயற்சி செய்து, தற்போது சிவாஜி குடும்பத்தில் மருமகள் ஆகி இருப்பவர் சுஜா வருணி. குழு நடனத்தின் மூலம் அறிமுகமாகி திரைப்படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடி அதன்பின் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

ஆரம்பகட்டத்தில் திரையுலகம் பற்றி அவ்வளவாக தெளிவு இல்லாததால் கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தப்பட்டவர், அதன்பின் படிப்படியாக உயர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர், போட்டியாளர்களுடன் கடுமையாக வெற்றிக்காக போராடினார். வாழ்க்கையில் இதுவரை பிரச்சனைகளும் துன்பங்களை மட்டுமே சந்தித்திருக்கிறேன், இதுவரை ஒரு வெற்றியைக் கூட அனுபவித்ததில்லை என மனம் உடைந்து கூறினார்.

தற்போது சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கும் சுஜா வருணி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சுஜாவா இது நம்பவே முடியலையே என ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

Views: - 2

0

0