கூலி படத்திற்கு U/A சான்றிதழ்? 1000 கோடி கல்லா கட்ட சன் பிக்சர்ஸ் எடுத்த திடீர் முடிவு?
Author: Prasad19 August 2025, 7:15 pm
“A” சான்றிதழ்!
1980களில் ரஜினிகாந்த் நடித்த “மூன்று முகம்”, “சிவா” போன்ற பல திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஆனால் அதன் பின் பல காலமாக ரஜினிகாந்த் படத்திற்கு “A” சான்றிதழ் வழங்கியதே இல்லை. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கிளப்பும் விதமாக “கூலி” திரைப்படத்திற்கு “A” சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனால் “கூலி” திரைப்படத்தை குழந்தைகளுடன் சென்று ரசிக்க முடியவில்லை.
மேலும் இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்திரைப்படம் தற்போது வரை ரூ.400 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த நிலையில்தான் சன் பிக்சர்ஸ் “கூலி” திரைப்படத்திற்கு “U/A” சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

1000 கோடி அடிக்க பிளான்?
அதாவது “கூலி” திரைப்படத்தை “U/A” சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சன் பிக்சர்ஸ் சார்பில் முறையிடப்பட்டுள்ளது. ஒரு வேளை இத்திரைப்படத்திற்கு “U/A” சான்றிதழ் வழங்கப்பட்டால் இத்திரைப்படத்தை குழந்தை குட்டிகளுடன் வந்து பார்ப்பார்கள், இதன் மூலம் இன்னும் அதிக வசூலை பெறலாம் என சன் பிக்சர்ஸ் கணக்கு போடுவது சிலர் கூறுகின்றனர்.
